வாஷிங்டன்:
சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் சோமாலியாவில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புகள் மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்போவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிட்ட குறுகிய அறிக்கையில் பென்டகன் தெரிவித்துள்ளதாவது: சோமாலியாவில் இருக்கும் பெரும்பான்மையான அமெரிக்கத் துருப்புகள் மற்றும் சொத்துக்கள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஹார்ன் பகுதியில் தற்போது 700 அமெரிக்கத் துருப்புகள் உள்ளனர்.
அமெரிக்க தேர்தலுக்கு முன்பு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க துறுப்புகளையும் திரும்ப வருமாறு உத்தரவிட்டு இருந்தார், மேலும் அவர் சோமாலியாவில் இருந்து அனைத்து துருப்புகளையும் திரும்ப வருமாறு தெரிவித்திருந்தார்.
அமெரிக்கக் கூட்டுப் படைத் தலைவரான மார்க் மில்லி புதன்கிழமை… சோமாலியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத் துருப்புகளுக்கான எதிர்கால கட்டமைப்பு இன்னும் விவாதத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இதைப் பற்றி பேசிய மார்க் மில்லி தெரிவித்துள்ளதாவது: சோமாலியா, அமெரிக்கர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கின்றது, சமீபத்தில் ஒரு சிஐஏ அதிகாரி கொல்லப்பட்டார் என்பதையும் மில்லி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு செயலாளரான கிரிஸ்டோபர் மில்லர் கடந்த வாரம் சோமாலியாவிற்கு சென்று அமெரிக்கத் துருப்புகளை சந்தித்தார், மேலும் இதைப்பற்றிய விரிவான தகவல்களை பென்டகன் தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கவில்லை.