லண்டன்: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 36 இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபிக்கு விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை அவர்கள் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கும், பஞ்சாபிகளுக்கும் கவலை அளிக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர். எனவே இது குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை கூட்டுமாறு கோரி உள்ளனர்.
இதற்கு முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.