சென்னை: ஊழல் புகார் காரணமாக அண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க, தமிழகஅரசு ஆணையம் அமைத்துள்ள நிலையில், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை, அவர் தமிழகமக்கள் மீது கொண்டுள்ள பற்றை வெளிக்காட்டியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அண்ணா பல்கலை,. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குரல்கொடுத்து வருகின்றன. இதையொட்டி தமிழகஅரசு, நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவுக்கு ஆதரவாக கொந்தளித்துள்ளார். அதில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர். சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
சூரப்பா மீதான புகார் குறித்து கடந்த சில மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென கமல்ஹசான் கொந்தளித்துள்ளது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் மோகத்தில் மூழ்கி கிடக்கும் நம்மவர் இப்போதுதான் சுயநினைவுக்கு வந்துள்ளார்போல என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்