கலிபோர்னியா: 

குதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு தனி வேலை பட்டியல் செயல்முறையை வைத்து, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு பாகுபாடு காட்டியதாக பேஸ்புக்கை எதிர்த்து நீதித்துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 2,600க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு, தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை நியமிக்கவோ, பரிசீலிக்கவோ அல்லது பணி அமர்த்தவோ பேஸ்புக் மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக நிரந்தர பணி அங்கிகாரம் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் படி ஃபேஸ்புக் வேண்டுமென்றே ஒரு பணி அமர்த்தல் முறையை உருவாகியுள்ளதாகவும், அதில் தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களுக்கான வாய்ப்பை மறுத்ததாகவும், அதற்கு பதிலாக க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து இதன் விசாரணை நடந்து வருகிறது.