டெல்லி: எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவானது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உள்ளது.
கொரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பில் மற்றும் பிஹெச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டு உள்ளார்.
முன்னதாக மாணவர்களுக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிஹெச்டி மற்றும் எம்பில் பயிலும் காலம் 5 ஆண்டுகளாகவே கணக்கில் கொள்ளப்படும்.
தொற்றுநோய் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று மாணவர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.