மாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின்.
‘ஸ்புட்னிக் V’ என்ற பெயரில், அதிக பயன்விளைவு தருவதாக சொல்லப்படும் தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளது ரஷ்யா. அந்நாடு தயாரித்துள்ள 2 வகையான தடுப்பு மருந்துகளில் இது முக்கியமானது.
இந்த நாடு தழுவிய பெரிய தன்னார்வ முகாமில், ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும், தடுப்பு மருந்து பெறுவதில் முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் புடின்.
மேலும், அடுத்த சில நாட்களுக்குள், 20 லட்சம் அளவிலான தடுப்பு மருந்து டோசஸ்களை ரஷ்யா தயாரிக்கும் என்றும் புடின் கூறியுள்ளார்.
ஸ்புட்னிக் V என்ற தடுப்பு மருந்திற்குத்தான், ரஷ்ய உள்நாட்டு ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த மருந்து தொடர்பான ஆராய்ச்சி மைய ஆய்வுகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.