சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரன ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இது  இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் டீசல் விலை போல அவ்வப்போது மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் ரூ610ஆகவே இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி டிசம்பர் 1ந்தேதி முதல் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. அதுபோல  வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக,  சமையல் கேஸ் விலை  ரூ.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.1,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயுவின் திடீர் விலை உயர்வு குடும்பத்தலைவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.