புதுடெல்லி:

ரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் அரசான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றன. அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். அரசுமுறை பயணமாக அவர் தமிழகம் வந்திருந்தாலும், அவரது பேச்சு முழுவதுமே தேர்தல் குறித்து தான் இருந்தது. இதே போல, திமுகவும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வயிலாக பேசிய ராகுல்காந்தி, “தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ், கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெறும். தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிமுக ஆட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவில் விடிவு ஏற்படும்” எனக் கூறினார்.