திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை நெடுநாளாக முன்வைக்கப்பட்டு வந்தது. அதையடுத்து தற்போது தேவசம் போர்டு கோவிலின் சொத்து குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 28 வரை நிகர சொத்து 7754 ஏக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் 1792 ஏக்கருக்கு, விவசாயமில்லாத நிலங்கள் 5961 ஏக்கருக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது. 1974 முதல் 2014 வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விறக்கப்பட்டு 6.13 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel