டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமிக்கப்பட்டு உள்ளார்.

கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். காங்கிரஸ் பொருளாளராக இருந்த அகமது படேல் கடந்த 25ம் தேதி காலமானார். இதையடுத்து, இடைக்கால நடவடிக்கையாக பவன் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கட்சி நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் பன்சாலுக்கு கூடுதல் பொறுப்பாக பொருளாளர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது.இந் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel