வாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவில், தற்போதைய நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது, கொரோனாவின் முதல் அலையின் விளைவாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அடுத்து, கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அப்படி நேர்ந்தால், மொத்தமாக 60,000 பேர் பலியாகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோனதன் இதுகுறித்து கூறியுள்ளதாவது, “வரும் நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 4000 அமெரிக்கர்கள் பலியாக வாய்ப்புள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால், அடுத்த 20 நாட்களில் அமெரிக்கா தனது குடிமக்களில் 60,000 பேரை இழக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

எனவே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது அமெரிக்கர்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.