டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 43,174 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,09,871 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,35,752 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 4,54,279 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 39,723 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 87,17,709 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,457 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 76ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,173 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 60, 964பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18லட்சத்து 2 ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 884பேர் ஆண்கள், 580பேர் பெண்கள். தமிழகத்தில் 219 பரிசோதனை மையங்கள் உள்ளன.
நேற்று ஒரே நாளில் மட்டும் 14பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 669ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாடிளல் 1,797பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,53,332ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.