ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு  6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது.

கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா ஒரு வருடமாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. அதை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இருந்தாலும்  உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    

தற்போதைய நிலையில்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 6,13,00,567 ஆக உயர்ந்துள்ளது.   மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,43,7629 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை  உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 42,392,177 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்,  உலகம் முழுவதும் 17,470,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,248,676 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 269,555 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,846,872 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,309,871 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 135,752 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,717,709 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,204,570 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 171,497 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,528,599 என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை  மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்தஆண்ட டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் இருந்து பரவத்தொடங்கிய இந்த உயிரிக்கொல்லி வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட  பல நாடுகளில்  மீண்டும் அதிகரிக்கத் தொடக்கி உள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி  4,96,45,848  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.52 கோடிக்கும் அதிகமானோர், அதாவது 3,52,43,033 பேர்  குணமடைந்துள்ளனர்.  மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12,4,971  போர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில்,  உலகம் முழுவதும் 13.15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.