சென்னை: நிவர் புயல் காரணமாக,  சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல்  தண்ணீர் தேங்கியுள்ளது.  இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டுள்ளதால், அடையாறில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக, கரையோர பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும்  கனமழை  காரணமாக பெரும்பான்மையான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சென்னையின் முக்கிய கடற்கரையான மெரினாவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மெரினா சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இது பார்ப்பதற்கு, கடல்போல காட்சி அளிக்கிறது.

[youtube https://www.youtube.com/watch?v=cUMNTEp3k0s?feature=youtu]