சென்னை: நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் உதவுவதற்காக  நிவாரணப் பொருட்களுடன் தயார் நிலையில் 4 கடலோர காவல்படை கப்பல்கள்  தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி, காவல்துறை  அறிவுறுத்தி உள்ளது. மேலும் சாலைகளும் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக உதவும் வகையில், பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளுடன் 4 கடலோட காவல்படையின் கப்பல்கள்  தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.