சென்னை: நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. இதனால், ஏராளமான மரங்கள் சாலையில் சரிந்துள்ள நிலையில், அவர்களை வெட்டி அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வங்க்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நிவர் புயலாக மாறி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இது மேலும் தீவிரம் அடைந்து. இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நிவர் புயல் கரையை கடக்கும்போது வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 1,200 தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) மீட்புப் பணியாளர்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த, சூழ்நிலையை கட்டுப்படுத்த மொத்தம் 50 என்டிஆர்எஃப் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், என்.டி.ஆர்.எஃப் குழு பொதுவாக 40 மீட்பு படையினரைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 22 அணிகள் முன் நிறுத்தப்பட்டுள்ளன. “இந்த 30 அணிகளில் 12 அணிகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவில் ஏழு மற்றும் புதுச்சேரியில் மூன்று அணிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 44 உறுப்பினர்கள் கொண்ட குழு திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு பொள்ளையர்பாளையம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் கடலோர கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர்
இந்த நிலையில் தேசிய மீட்பு குழுவின் ஒரு பகுதியினர் காரைக்காலில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இதையடுத்து, முதல்கட்டமாக மின்விநோயகத்தற்கு தடங்கலாக சரிந்து விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.