சபரிமலை
சபரிமலையில் உள்ள கடைகளில் பணி புரியும் ஊழியருக்கும் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தற்போது மண்டலம் மற்றும் மகர விளக்குப் பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தினசரி 1000 ஆனலைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவிர மலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலையில் கடைகள் அமைப்பது வழக்கமாகும். அதைப் போல் தற்போதும் மலையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.