டெல்லி: 50சதவிகித விலையில், ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என சீரம் நிறுவனத் தலைமை அதிகாரி பூனம்வல்லா தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் சோதனை இந்தியாவில் சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருகிற்து. ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் 2021ம ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் சீரம் நிறுவன அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தற்போது, அவசர சிகிச்சைக்கு கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. இதையடுத்து, 2021ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரி மாதத்தில், இந்து மருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இருந்து பாதி விலையில் இந்தியாவுக்கு க்கும் கிடைக்கும் என்றும் .2 ° C முதல் 8 ° C வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய வகையில் இந்த தடுப்பூசி இருக்கும் என்றும் பூனவல்லா கூறி உள்ளார்.