புவனேஸ்வர்: ஒடிசா மாநில கவர்னர் விநாயகர் லாலின் மனைவி சுசீலா தேவி ( வயது 74) கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

ஒடிசா மாநில கவர்னராக இருந்து வருபவர் விநாயகர் லால். இவரது குடும்பத்தில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கடந்த 2ந்தேதி (நவம்பர்) கவர்னரின் மனைவி சுசிலா தேவிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வேறு சில இணை நோய்களும் இருந்ததால், அவரால் முழுமையாக குணமடைவதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில், 21 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, நேற்று இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா காங்கிரஸ்  தலைவர் நிரஞ்சன் பட்நாயக், பாஜக மாநில தலைவர் சமீர் மொஹந்தி உள்ளிட்ட பலர் ச வருத்தம் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]