பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் இரண்டாவது போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணி, மும்பையை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இந்தப் போட்டி, கோவாவின் வாஸ்கோ நகரில் நடைபெற்றது.
போட்டியின் 43வது நிமிடத்தில், முரட்டுத்தனமாக விளையாடிய மும்பை அணியின் அகமது ஜாஹுட் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற, 10 வீரர்கள் விளையாட வேண்டிய சூழல் மும்பை அணிக்கு. மேலும், முதல் பாதி ஆட்டம், கோல் எதுவுமின்றி நிறைவுற்றது.
பின்னர், இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில், வடகிழக்கு யுனைடெட் அணிக்கு பெனால்டிக் வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றினார் கிவேசி அப்பியா.
ஆனால், பந்த அதிகநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும், மும்பையால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கணக்கில் மும்பையை வென்றது வடகிழக்கு யுனைடெட் அணி.