#GoBackAmitShah #TNwelcomesamitshah என சமூகவலைதளமான டிவிட்டரில் திமுக, மற்றும் பாரதியஜனதா கட்சிகள் டிரெண்டிங் போரில் ஈடுபட்டு வருவதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackAmitShah ஹேஷ்டேக்கை திமுக டிரெண்டிங் செய்து வந்த நிலையில், பாஜகவினர் #TNwelcomesamitshah என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி திமுகவுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்த இரு ஹேஷ்டேக்குகளும் டிரெண்டங்காகி வருகிறது. இதைக்காணும் இணையதளவாசிகள் இரு கட்சிகளையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துக்கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரின் வருகையை பாஜகவினர் எதிர்நோக்கிய நிலையில், திமுக தனது இணையதள எதிர்ப்பை கையில் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமித்ஷா வருகைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். இந்த நிலையில், தற்போதுஅமித்ஷாவுக்கு ஆதரவாக #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டேக்குகள் பாஜகவினரால் டிரெண்டிங் செய்து வரும் நிலையில், #Goback_Mr_420, #Goback_Tadipar போன்ற ஹேஷ்டேக்குகளைதிமுகவினர் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இரு தரப்பினரும் மாற்றி மாற்றி சமூக வலைதளத்தை தங்களது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதை கண்டித்துள்ள நெட்டிசன்கள், இதோ ஆரம்பிச்சுடானுங்கல… என்று நக்கலடித்து உள்ளார்.
இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியும் பதிவுகளை போடுவதில், டிவிட்டர் சமூக இணையதளம், சமூக இணையதளமாக இல்லாமல் அரசியல் கட்சிகளின் இணையதளம் போல இருப்பதாக நெட்டிசன்கள் குமுறி உள்ளனர்.
சில சமூக ஆர்வலர்களோ, இந்த டிரெண்டிகினால் மக்களுக்கு என்ன பலன் என்ற கேள்விகளை எழுப்பி இருப்பதுடன், இருகட்சிகளும், இணையதளத்தில் விளம்பரம் செய்தவற்காக மாவட்டங்கள் தோறும் குழு அமைத்து, ஏராளமானோரை தற்காலிக பணியில் அமர்த்தி, அவர்களுக்கு ஊதியம் வழங்கி, சமுக வலைதளத்தில் தங்களது கட்சியின் தகவல்களை பிரபலப்படுத்த பல கோடிகள் செலவிட்டு வருவதாகவும், இந்த டிரெண்டிகினால் சாமானிய மக்களுக்கு கிடைக்கப்போதுவது ஏதும் இல்லை என்றும் கருத்து பதிவிட்டு உள்ளனர்.