தமிழில் வீடு (1988), தெலுங்கில் தாசி (1989) ஆகிய இரண்டு படங்களுக்காக தொடர்ச்சியாக தேசிய விருது பெற்ற ஒரே நடிகை அர்ச்சனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் வங்காளம் ஆகிய ஆறு மொழிப்படங்களில் நடித்தவர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்க ஐதராபாத் சென்ற அர்ச்சனா, அங்குள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கருப்பு நிறமாக இருந்ததால், சினிமாவில் அவருக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலுமகேந்திரா பார்வையில் பட்டார். நடிகையானார்.

சுதா என்ற சொந்த பெயரை அர்ச்சனா என மாற்றி முகவரி கொடுத்தவரும் அவர் தான்.

“கறுப்பாக இருப்பதால் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?” என்று கேட்டபோது, வினா தொடுத்தவரை விளாசி தள்ளி விட்டார்.

“ஏன் வருத்தப்பட வேண்டும்? திராவிட இனத்தின் நிறமே கருப்பு தானே? சினிமாவில் அநேக நடிகர்கள் நிறம் கருப்பு தான். எனவே நான் கருப்பாக இருப்பதால் எந்த வருத்தமும் கிடையாது” என்று பொரிந்து தள்ளி விட்டார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]