திருவனந்தபுரம்: கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பேசியதாக ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், தற்போது, ஸ்வப்னாவுடன் சிறையில் 15 பேர் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கேரள அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
இந்த நிலையில், விய்யூர் மத்திய சி்றையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்வப்னாவை கேரள முதல்வரும், நிதி அமைச்சரும் காப்பாற்ற முயல்கிறார்கள் என்றும், சிறையில் ஸ்வப்னாவுக்கு ஏகப்பட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்றும் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில், தனக்கு அமலாக்கத்துறையினரால், முதல்வர்மீது குற்றச்சாட்டுக்கூட அழுத்தம் தரப்படுவதாக, ஸ்வப்னா சுரேஷ் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சிறைத்துறையினரின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
மாநில பாஜக தரப்பில் இருந்து, ஸ்வப்னாவை சந்திப்பவர்கள் குறித்து சந்தேகம் எழுப்பபட்டு வருகிறது. அதுபோல எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் இருந்தும், முதல்வர் பினராயி விஜயன், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்து வருகிறார், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது . ‘’சிறையில் இருக்கும் ஸ்வப்னாவை நிறைய பேர் ரகசியமாக வந்து பார்த்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் உள்ள சில காவலர்கள் முதல் இந்த தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒரே நாளில் 15 பேர் சிறையில் ஸ்வப்னாவை சந்தித்து பேசியதாகவும், தொடர்ந்து அவ்வப்போது, அவரது குடும்பத்தினர் உள்பட பலர் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிறையில் ஸ்வப்னாவுக்கு அளவுக்கு மீறின சலுகைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் சமுக ஊடங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிறைத்துறை டிஜிபி ருஷிராஜூ விளக்கம் அளித்துள்ளார். சிறைத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறது. ஸ்வனாவை அவரது தாயார், மகன், மகள், கணவருக்கு மட்டுமே சந்தித்து வருகின்றனர். வேறுசிலர் ஸ்வப்னாவை சந்தித்தபோதும், அவரது உறவினர்கள்முன்னிலையில்தான் பேசினர். இநத சந்திப்புகள் ரகசிய சந்திப்பு இல்லை. அது சிறையில் உள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது என்ற கூறியுள்ளார்.
ஆனால், பாஜக, காங்கிரஸ் கட்சியினரோ, முக்கிய குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ஸ்வப்னாவை, அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் சந்தித்து பேச அனுமதிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், தங்கக்கடத்தல் குற்றவாளிகளை, கேரள சிறையில் இருந்து கர்நாடக மாநில சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து, அமலாக்கத்துறை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.