சென்னை
கடந்த 2018 ஆம் வருடம் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளைச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இந்தியா எங்கும் கிளைகளுடன் இயங்கி வந்தது. வாராக்கடன் அதிகரிப்பால் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இந்த வங்கி பெரிய தொகைகளைக் கடன் அளிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆயினும் நிதி நெருக்கடி சரியாகாததால் தற்போது பொருளாதாரத்துறை இந்த வங்கி இயங்க தடை விதித்துள்ளது. அதையொட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும் என்னும் நிலையை அடைந்துள்ளது.
இந்த வங்கியின் நிதிநிலையை மேம்படுத்த வங்கி நிர்வாகம் கடந்த 2018 ஆம் வருடம் ஜே பி மோர்கன் நிதி நிறுவனத்தை பணியில் அமர்த்தியது. இதையொட்டி மோர்கன் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை ரூ. 100 முதல் ரூ. 155 வரை விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. அப்போது இது உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து லட்சுமி விலாஸ் வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான பிரதீப், “சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி எங்கள் வங்கியின் 50% பங்குகளைப் பங்கு ஒன்றின் விலை ரூ.100 என வாங்க முன் வந்தது. டி பி எஸ் வங்கி அப்போது எங்களது வங்கியின் முழு பொறுப்பையும் ஏற்று உலக அளவில் இயங்க விரும்பியது.
இந்த விவரங்கள் குறித்து டிபிஎஸ் மற்றும் ஜே பி மோர்கன் நிறுவனம் ஆகியவை ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தின. அப்போது 50% பங்குகளுக்குக் குறைவாகப் பெற முடியாது என டிபிஎஸ் வங்கி திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால் தனியார் வங்கிகளின் விதிகளுக்கு அது ஒத்து வராது எனக் கூறி ரிசர்வ் வங்கி மறுத்ததால் இந்த ஒப்பந்தம் முடிவடையவில்லை”
இதையொட்டி டிபிஎஸ் வங்கி இதே கோரிக்கையுடன் மத்திய அரசை அணுகியது. அப்போது டிபிஎஸ் வங்கி ஒரு பங்கின் விலை ரூ.100 என வாங்கச் சம்மதித்தது. ஆனால் இப்போது வங்கியின் முழு பொறுப்பையும் விலை ஏதும் இன்றி டிபிஎஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
டிபிஎஸ் வங்கிக்கு லட்சுமி விலாஸ் வங்கியில் அடிப்படை முதலீடு ரூ.7500 கோடி மற்றும் கணக்கு முதலீடு ரூ.25000 கோடி உள்ளது. இந்த மதிப்புக்குப் பதில் முழு வங்கியையும் டிபிஎஸ் வங்கி பெற உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.