டெல்லி: சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சமுதாய வானொலி நிலைய அனுமதியை ரத்து செய்ய கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர் வேளாண் அறிவியல் மையங்கள், சென்னை மருத்துவக்கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள், சமுதாய வானொலி நிலையம் அமைக்க அனுமதி பெற்றுள்ளது.
அனுமதிக்கு பிறகு வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகையால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமுதாய வானொலி பிரிவு 12 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அதில் நிறுவனங்களுக்கு வழங்கியிருந்த நோக்கக் கடிதத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும், 30 நாட்களுக்குள் பதிலளிக்க தவறினால் நோக்கக் கடிதம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.