லக்னோ :
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஒபாமா விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் கியான் பிரகாஷ் சுக்லா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அங்குள்ள லால்கஞ்ச் சிவில் நீதிமன்றத்தில் சுக்லா தாக்கல் செய்துள்ள மனுவில் “இந்திய இறையான்மைக்கு எதிராக ஒபாமா கருத்து தெரிவித்துள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
“ஒபாமா மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் அமெரிக்க தூதரகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்” என வழக்கறிஞர் சுக்லா எச்சரித்துள்ள, நிலையில் அவர் தாக்கல் செய்த மனு மீது, வரும் ஒன்றாம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பா. பாரதி