புதுடெல்லி:
இந்திரா காந்தியின் பிறந்த தினத்தன்று, தனது அன்பான பாட்டியை அரிய புகைப்படங்களுடன் ராகுல்காந்தி கூர்ந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய பிறந்ததினத்தில் “ஒரு திறமையான பிரதமராகவும் தன்னுடைய அன்பான பாட்டியாக” இருந்ததை நினைவு கூர்ந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் இந்திரா காந்தி, இன்று அவரது 103-ஆவது பிறந்த தினம், இந்த தினத்தில் அவருடைய கருப்பு வெள்ளை படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி “திறமைமிக்க மற்றும் வலுவான பிரதம மந்திரி இந்திரா காந்தி ஜியின் பிறந்தநாள் இன்று” என்று ஹிந்தியில் பதிவிட்துள்ளார்.
மேலும் ஒட்டுமொத்த தேசமும் அவருடைய சிறந்த தலைமையை நினைவில் கொண்டு இன்றும் பாராட்டி வருகிறது; ஆனால் நான், அவரை என்னுடைய அன்பான பாட்டியாக நினைவுகூர்கிறேன், அவருடைய போதனைகள் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கின்றன என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இந்திய தேசிய காங்கிரசின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி இணைந்திருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “எல்லையை மீறிய ஒரு இணைப்பு, ஒற்றுமையை வலுப்படுத்த ஒரு பிணைப்பு, இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்த ஒரு அன்பு… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா காந்தியின் தொடர்பு இதுதான்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய நாட்டுடைய முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவரும் இவரே, இவர் 1984 ஆம் ஆண்டு தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel