பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் நவம்பர் 20ம் தேதியான நாளை, கோவாவில் துவங்குகிறது.

இந்தத் தொடரில், இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, மூன்றுமுறை சாம்பியனான கொல்கத்தா மற்றும் மும்பை & கேரளா அணிகளும் கலந்துகொள்கின்றன.

இத்தொடரில், ஈஸ்ட் பெங்கால் என்ற பெயரில், ஒரு புதிய அணியும் இணைகிறது. இதன்மூலம், கலந்துகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை மொத்தம் 11 என்றாகிறது.

பராம்பரியமிக்க மோகன் பகான் அணி, கொல்கத்தாவுடன் இணைந்து பங்கேற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தொடரில், ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறைகள் மோதும்.

லீக் போட்டிகளின் முடிவில், முதல் நான்கு போட்டிகளை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். கொரோனா பரவல் காரணமாக, இந்தப் போட்டிகள் அனைத்துமே, கோவா மாநிலத்தில் உள்ள பம்போலிம், படோர்டா, மற்றும் வாஸ்கோ ஆகிய மைதானங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில், கொல்கத்தா – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.