சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தென்மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் 12 செமீ, கூடலூர், ஸ்ரீவைகுண்டம் 8 செமீ, பாளையங்கோட்டை தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
கேரள கடற்பகுதி, லட்ச தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.