சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,531 பேர் உயிர் இழந்து 7,37,281 பேர் குணம் அடைந்து தற்போது 14,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,10,135 பேர் பாதிக்கப்பட்டு 3,788 பேர் உயிர் இழந்து 2,01,649 பேர் குணம் அடைந்து தற்போது 4,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 46,920 பேர் பாதிக்கப்பட்டு 593 பேர் உயிர் இழந்து 45,510 பேர் குணம் அடைந்து தற்போது 817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,275 பேர் பாதிக்கப்பட்டு 698 பேர் உயிர் இழந்து 44,692 பேர் குணம் அடைந்து தற்போது 885 பேர் சிகிச்சையில் உள்ளனர்.