சென்னை: தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிப்பில்,  தமிழகம் முழுவதும ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 4376 கி.மீ சாலை மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11 ஆயிரம் கி.மீ சாலைகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ள அரசு, தமிழகம் முழுவதும் ஊரக சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசாணையில் தெரிவித்து உள்ளது.

 பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ், 4 ஆயிரத்தி 376 கிலோ மீட்டர் சாலைகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்  பதினோராயிரம் கிலோ மீட்டர் சாலைகளையும்  மேம்படுத்தநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தற்போது சாலைகளை மேம்படுத்த தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, மக்களை ஏமாற்றும் செயல் என்றும், இதன் காரணமாக முறைகேடுகள் நடைபெறவே தமிழகஅரசு வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.