சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துறை சார்ந்த பணிகளுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக பாஜக சார்பில் கூறப்பட்டு உள்ளது. தமிழக பாஜக சார்பில் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், அமித் ஷா தமிழகம் வருகிறார்.
மேலும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் அமித் ஷாவிற்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel