அஜீத் நடிக்கும் புதிய படமான ‘வலிமை ‘ திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க எச்.விநோத் டைரக்ட் செய்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு சினிமா ஷுட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வலிமை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் இந்த படத்தின் ஷுட்டிங்கில் அஜீத் பங்கேற்று நடித்து வருகிறார்.

படம் நன்றி அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கம்

தீபாவளி தினமான இன்றும் ஷுட்டிங் நடக்கிறது.

தீபாவளி பண்டிகையை படப்பிடிப்பு தளத்தில் அஜீத் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் கொண்டாடுகிறார்கள்.

தற்போது அஜீத் பங்கேற்கும் ’பைக்’ சண்டை காட்சியும், பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. வரும் 19 ஆம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக குறுகிய கால இரு “ஷெட்யூல்கள்” உள்ளன. ஐதராபாத் படப்பிடிப்பில் மெலிந்த தோற்றத்தில் அஜீத் பங்கேற்ற சண்டை காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

– பா.பாரதி