ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தோனேஷியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,735 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிற்கு புதியதாக 104 பேர் பலியாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,037 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 3,010 பேர் குணமாக, இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,85,094 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் 34 மாகாணங்களிலும் கொரோனா பரவியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மத்திய ஜாவாவில் 1,362 பேரும், ஜகர்தாவில் 1,033 பேரும், கிழக்கு ஜாவாவில் 239 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]