கோவா மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷில்பா சிங்.
“மாங்கல்யமும், நாய்களை கட்டுப்போடும் சங்கியும் ஒன்று தான்” என தனது முகநூலில் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், நிர்வாகிகள், ஷில்பா வேலை பார்க்கும் கல்லூரிக்கு சென்று, அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், “ஷில்பா சிங்கை வேலையில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்ய சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” என முகத்தில் அடித்தால் போல் கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.
இதையடுத்து ராஷ்டிரிய இந்து யுவ வாகினி என்ற அமைப்பை சேர்ந்த ராஜீவ் என்பவர்,பானாஜியில் உள்ள நகர காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இதனால் பேராசிரியர் ஷில்பா சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முகநூல் பதிவுக்காக தன்னை மிரட்டியதாக ராஜீவ் மீது ஷில்பாவும் ஒரு புகார் அளித்தார். அதனை ஏற்று ராஜீவ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
– பா. பாரதி