டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,35,754 ஆக உயர்ந்து 1,27,615 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 44,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 86,35,754 ஆகி உள்ளது. நேற்று 511 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,27,615 ஆகி உள்ளது. நேற்று 54,639 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 80,11,844 ஆகி உள்ளது. தற்போது 5,04,916 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,791 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,26,926 ஆகி உள்ளது நேற்று 110 பேர் உயிர் இழந்து மொத்தம் 45,435 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,769 பேர் குணமடைந்து மொத்தம் 15,88,091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 92,461 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,362 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,51,212 ஆகி உள்ளது இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,430 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,215 பேர் குணமடைந்து மொத்தம் 8,08,700 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 31,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,886 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,46,245 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,814 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,151 பேர் குணமடைந்து மொத்தம் 8,18,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,146 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,48,225 ஆகி உள்ளது இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,237 பேர் குணமடைந்து மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,121 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,01,311 ஆகி உள்ளது இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,201 பேர் குணமடைந்து மொத்தம் 4,71,204 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.