துபாய்: ஐபிஎல் 2020 தொடரில், அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இன்று படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியின் ஷிகர் தவான், 15 ரன்களுக்கு பெளல்டாகி ஏமாற்றினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், மொத்தம் 14 போட்டிகளில் ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், மொத்தமாக 670 ரன்களை அடித்துள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க வேண்டுமானால், இந்தப் போட்டியில் ஷிகர் தவான் 68 ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
இத்தொடரில், 2 சதங்கள் அடித்துள்ள தவான், அதை செய்வார் என்றே அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜெயந்த் யாதவ் பந்தில் கிளீன் பெளல்டு ஆனார் ஷிகர் தவான்.
இவர் மொத்தமாக, இத்தொடரில் 17 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், 14 போட்டிகளில் ஆடிய ராகுலின் சாதனையை முறியடிக்க முடியவில்லை.