காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும்,  தொற்று பரவலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. நேற்று ஒரே நாளில்,  2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  7,46,079  ஆக உயர்ந்துள்ளது.  காஞ்சிபுரத்தில் தொற்றால் 26,269  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட  ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி, கடந்த 30ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.