டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,91,075 ஆக உயர்ந்து 1,27,104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 37,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 85,91,075 ஆகி உள்ளது.  நேற்று 450 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,27,104 ஆகி உள்ளது.  நேற்று 41,450 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 79,57,206 ஆகி உள்ளது.  தற்போது 5,04,916 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,277 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,23,135 ஆகி உள்ளது  நேற்று 85 பேர் உயிர் இழந்து மொத்தம் 45,325 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,232 பேர் குணமடைந்து மொத்தம் 15,77,322  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,564 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,963 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,48,850 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,410 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,686 பேர் குணமடைந்து மொத்தம் 8,04,485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 32,936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,392 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,44,359 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,802 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,549 பேர் குணமடைந்து மொத்தம் 8,16,322 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,257 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,46,079 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,362 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,308 பேர் குணமடைந்து மொத்தம் 7,15,892 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,627 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,99,190 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,231 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,895 பேர் குணமடைந்து மொத்தம் 4,69,003 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.