புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு மோடி அரசு அமல்படுத்திய மாபெரும் பொருளாதார பேரழிவு நடவடிக்கையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிறக்கும் 1000 குழந்தைகளில், ஓராண்டிற்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்ற எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே குழந்தை இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.
கடந்துபோன சில பத்தாண்டுகளை ஒப்பிடுகையில், கடந்த 2005-2016 வரையிலான காலக்கட்டத்தில், குழந்தை இறப்பு விகிதத்தில் 4.8% அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதற்கு முந்தைய காலக்கட்டங்களில், அந்த சரிவு விகிதம் 3% என்பதற்குள்தான் இருந்தது.
ஆனால், மோடியின் நடவடிக்கையால், இறப்பு விகித வீழ்ச்சி மீண்டும் குறைந்தது. 2016ம் ஆண்டின் நடவடிக்கையால், அடுத்த 2017ம் ஆண்டில் வீழ்ச்சி அளவு 2.9% என்பதாகவும், 2018ம் ஆண்டில் வீழ்ச்சி அளவு 3.1% என்பதாகவுமே குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஷயங்களை இன்னும் ஆழமாக நோக்கினால், உண்மைகள் இன்னும் மோசமானவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.