மும்பை
ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் சேலம் கிரிக்கெட் வீரர் நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இதில் 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த போட்டிகள் அநேகமாக நவம்பர் 27 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா பயணத்துக்கான இந்திய அணி வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.