திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கவர்னர் மாளிகை செய்தித்தொடர்பாளர் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும், கடந்த வாரம் தான் டெல்லி சென்றிருந்தபோது, டெல்லியில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கோவிட் சோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், அல்லது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel