ஈரானில் மத தலைவர் அயதுல்லா சையத் அலி காமேனி. இவர்தான் ஈரான் நாட்டின் தலைவராக உள்ளார். அதாவது ஒரு நாட்டின் அரசர் போன்று அனைத்து அதிகாரங்களும் கொண்டவர்.

இந்த ஆண்டு நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவையொட்டி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொது மற்றும் புரட்சிகர கோர்ட்டுகளால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான பரிந்துரையை ஈரான் நீதித்துறையின் தலைவர் அயதுல்லா இப்ராகிம் ரெய்சி செய்திருந்த நிலையில், காமேனி அதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பெல்ஜியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந்தேதியன்று ஆஸ்திரியா நாட்டுக்கான ஈரான் தூதரக உயர் அதிகாரி அசதுல்லா ஆசாதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஐ.நா. சபை தலையிட்டு அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானிய பேராசிரியர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel