புதுச்சேரி: ஒட்டகப் பாலில் டீ போடுப்பா என புதுச்சேரியில் டீக்கடை ஒன்றில், வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பலை காவல்துறையினர் கொத்தாக அள்ளிச்சென்றனர்.
நடிகர் வடிவேலு ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்தில் துபாய் ரிட்டர்ன் வாலிபராக நடித்திருப்பார். அந்தபடத்தின் ஒரு சீனில் டீக்கடை ஒன்றுக்கு சென்று, ‘ஏம்பா… எத்தன தடவ சொல்றது ஒட்டக பாலுல டீ போடுனு. துபாய்லலாம் ஒட்டகப்பாலில் தான் டீ போடுவாங்க’ என்று நக்கலடிப்பார்.
அதுபோல ஒரு கும்பல், புதுச்சேரி பகுதியில் டீ கடைக்காரர் ஒருவரிடம் ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு தகராறு செய்த கும்பல் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரியாங்குப்பம் என்ற பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட ஒரு கும்பல் வந்தனர். அவர்கள் ஒட்டகப் பாலில் டீ போட்டுத் தரும் கடை உரிமையாளரிடம் ரகளை செய்தனர். ஒட்டகப்பால் இங்கு கிடையாது என்றும் ஆவின் பால் தான் உள்ளது என்றும் கடைக்காரர் கூறியதற்கு ஒட்டகப் பாலில் தான் டீ வேண்டும் என கடை உரிமையாளரிடம் அந்த கும்பல் ரகளை செய்தனர்
இது குறித்து காவல் நிலையத்தில் டீக்கடைக்காரர் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கடை உரிமையாளருடன் ரகளை செய்த கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
“ஒட்டகப் பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது. இன்சுலின் போன்ற புரதச்சத்து அதிகமாகக் கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்குவதுடன், ஆரோக்கியமானதாகும்,” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வடமாநிலங்களில் அமுல் நிறுவனம் ஒட்டகப்பால் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.