டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
திடீர் பயணமாக இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் இருக்கும் அவர் குடியரசுத் தலைவர்,உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆளுநர் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம், கொரோனா பரவல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.