சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில் கருத்தை கூறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து, வரும் 9ந்தேதி பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றும், அவர்களின் கருத்துக்களை கேட்டபிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.