டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்த போதிலும், டெல்லியில் தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவாக 6,700க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு பதிவானது.
இந் நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் சில நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் 3வது அலை என்று அழைக்கலாம்.
தொற்று பரவல் விகிதத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் பயப்பட வேண்டாம். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.