இவர் கடந்த 2018ஆம் ஆண்டுதான் சிஎஸ்கே அணிக்கு வந்தார். 2018 ஐபிஎல் இறுதி போட்டிடயல் சிறப்பாக ஆடிய ஷேன் வாட்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து சிஎஸ்கே ஐபிஎல் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அதைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியில் தொடரும் வாட்சனால், எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியாத நிலையே தொடர்ந்து வந்தது. இருந்தாலும், தோனி, அவர் மீது நம்பிக்கை வைத்து நீடிக்க வைத்தார் கடந்த ஆண்டு (2019) ஐபிஎல் தொடரின் பின் பாதியில் ஷேன் வாட்சன் தன் பார்முக்கு திரும்பி வேட்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் அடித்து மிரட்டினார். அடுத்து இரண்டாவது தகுதி நீக்க போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2019 ஐபிஎல் இறுதிப் போட்டி 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட சிஎஸ்கே அணியை கோப்பை வெல்ல வைக்க கடுமையாக முயன்றார். 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். எனினும், அந்தப் போட்டியில் சிஎஸ்கே 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமரேட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ரெய்னா, ஹர்பஜன்சிங் போன்ற சில முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி தடுமாறியதுடன், இடையிலேயே வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான, ஆஸ்திரேலிய வீரன் ஷேன் வாட்சன், சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.