புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து டாட்டாவிற்காக தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் ஓசூரில் உள்ள தொழில்துறை வளாகத்தில், உற்பத்திக்காக 500 ஏக்கர் நிலத்தை டாட்டா குழுமத்திற்க்கு ஒதுக்கியுள்ளது.
தொழில் வளர்ச்சியின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலும் டாட்டா குழுமத்தின் முதலீடு, ரூபாய் 8000 கோடியாக உயர்த்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று இதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஆலையில் 18,000 ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் 90% பெண்கள் என்றும் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவுவதாகவும், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இதற்காக போட்டி போட்டதாகவும், இறுதியில் தமிழகம் கர்நாடகாவை வீசியுள்ளது என்று தெரியவந்துள்ளது.