வாஷிங்டன்:
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முக கவசம் அணியும் விதிமுறைகளை பின்பற்றாததற்காக, விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய புதிய குறிப்பாணையில் தெரிவித்துள்ளது.

இந்த வார நிலவரப்படி எங்கள் முக கவசம் அணியும் விதிமுறைகளை பின்பற்ற மறுத்ததற்காக, நாங்கள் 460 பேர் பயணிப்பதை ரத்து செய்துள்ளோம், என்ற டைட்டா தலைமை நிர்வாக அதிகாரி எட் பாஸ்டன் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சுமார் 270 பயணிகளின் பயணத்தை ரத்து செய்துள்ளதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசிடமிருந்து புதிய கொரோனா விதிமுறைகள் எதுவும் இல்லாத நிலையில், அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளது.